பால்குட ஊர்வலம்!
ADDED :4019 days ago
ஆத்தூர்: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், நேற்று, ஆத்தூர் நகராட்சி, அ.தி.மு.க., குழு தலைவர் இளையராஜா தலைமையில், ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, பால் குடம் ஊர்வலம் நடந்தது. முன்னதாக, ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து, ராணிப்பேட்டை, கடை வீதி வழியாக, 405 பேர் ஊர்வலமாக சென்று, மந்தைவெளி மாரியம்மன் கோவிலில், பால் அபிஷேகம் செய்து, வழிபாடு செய்தனர். நகராட்சி சேர்மன்கள் ஆத்தூர் உமாராணி, நரசிங்கபுரம் காட்டுராஜா (எ) பழனிசாமி, முன்னாள் நகர செயலாளர் அர்ஜுனன், 29வது வார்டு செயலாளர் கர்ணன், காளி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.