உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெ., விடுதலையாக வேண்டி கோவிலில் அங்கபிரதட்சணம்!

ஜெ., விடுதலையாக வேண்டி கோவிலில் அங்கபிரதட்சணம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தொகுதி சார்பில் அங்காளம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெ., விடுதலை யாகி மீண்டும் முதல்வராகவேண்டி அ.தி.மு.க.,நிர்வாகிகள் அங்கபிரதட்சணமும், பெண்கள் தீச்செட்டி ஏந்தி கோவிலை வலம் வந்தனர். தொகுதி இணை செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் தலைமையில், எம்.ஜி.ஆர்.,மன்ற ஒன்றிய இணை செயலாளர்கள் குணசேகரன், ஜெயாபழனிசாமி, இளைஞரணி நகர செயலாளர் ராமலிங்கம், பேரூராட்சி 3வது வார்டு செயலாளர் பாலசுப்ரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் கோதண்டபாணி ஆகியோர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. பெண்கள் அக்னி சட்டி ஏந்தி அங்கபிரதட்சணம் செய்தவர்களுடன் கோவிலை வலம் வந்தனர். ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, ஜெ.,பேரவை நிர்வாகி பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !