மீன் வியாபாரிகள் சிறப்பு ஹோமம்!
ADDED :4019 days ago
விழுப்புரம்: விழுப்புரம் நகர மொத்த மீன் வியாபாரிகள் சங்கம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சார்பில், பெங்களூரு சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெ., விடுதலை பெற வேண்டி, விழுப்புரம் ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு ஹோமம் நடந்தது. சங்கத் தலைவர் மணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் பாஸ்கரன், கவுன்சிலர்கள் பாபு, வழக்கறிஞர் செந்தில் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பழனி, பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் ஆறுமுகம், சுந்தரம், துர்க்காராம், செல்வ மணி, மாயாண்டி, கலியன், சேகர், மணிகண்டன், சண்முகம், மணி, தணிகாசலம் கலந்து கொண்டனர்.