உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா!

மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா!

மதுரை: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று முதல் துவங்குகிறது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மட்டும் விழா இரவு 7.30 மணியளவில் துவங்குகிறது. ஒவ்வொரு வருடமும் தாமோதர தீபத்திருவிழா என்ற விழாவை இஸ்கான் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் சிறப்பம்சம் என்னவெனில், பக்தர்களே நேரடியாக சுவாமிக்கு தீப ஆரத்தி காட்டலாம் என்பதே ஆகும். மதுரையில் இவ்விழா, மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று முதல் துவங்குகிறது. இவ்விழாவின் சிறப்பம்சம் என்னவெனில், இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் தாங்களே நேரடியாக சுவாமிக்கு தீப ஆரத்தி காட்டலாம். தினமும் மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இவ்விழா நவம்பர் 6ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும்.

தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரை. அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டு தமோதர தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்த இடமும் கிருஷ்ணர் வளர்ந்த இடமுமான (டெல்லிக்கு அருகில் உள்ள) கோகுலத்தில் இவ்விழா ஒரு மாத காலம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் இன்று அக்டோபர் 8 முதல் நவம்பர் 6 வரை இவ்விழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களிலும், கோகுலத்தில் கொண்டாடப்படுவதைப் போல ஒரு மாத கால காலம் இவ்விழா அனுசரிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிய நாகத்தின் மீது நடனமாடியது. நரகாசுரனை வதம் செய்தது, கோவர்த்தன கிரி மலையை சுண்டு விரலால் தூக்கி குடையாகப் பிடித்தது உள்ளிட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பெரும்பாலான குழந்தைப் பருவ சாகசங்கள் இம்மாதத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தீப ஆரத்தியும், இனிய பாடலும் விழாவின் சிறப்பம்சம்:  ஒவ்வொரு நாளும் இஸ்கான் கோயில்களில் மாலை 6.30 மணிக்கு துவங்கும் பூஜையைத் தொடர்ந்து சுமார் 7 மணிக்கு பங்கேற்பவர்கள் அனைவரும் தாங்களே தங்கள் கரங்களால் நேரடியாக நெய் தீப ஆரத்தி காட்டலாம். தீப ஆரத்தியின் போது கோகுலத்தில் பாடப்பெறும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ சாகசங்கள் நிறைந்த புகழ் பெற்ற பாடலான தாமோதரஷ்டகம் என்றழைக்கப்படும் எட்டு ஸ்லோகங்கள் அடங்கிய பாடல் கேட்போரின் மனதிற்கு மிகவும் இனியதாக அமையும். அதுமட்டுமல்லாது, தாமோதரரான ஸ்ரீகிருஷ்ணரை இப்பாடல் மிகவும் கவரக் கூடியது. எனவே தீப ஆரத்தியும், இனிய பாடலும் தாமோதரத் திருவிழாவின் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது. வேத சாஸ்திரங்கள், யார் ஒருவர் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் கூட நீங்கி விடுகின்றன என்று குறிப்பிடுகிறது. விழாவின் விசேஷ திருநாட்களான அக்டோபர் 12, 19, 22, 26, நவ 2, 6 தேதிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

சந்திர கிரகணம்: சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் (8-10-2014 புதன்) தாமோதர தீபத்திருவிழா இரவு 7.30 மணியளவில் துவங்கும். மற்ற நாட்களில் நவம்பர் 6 வரை வழக்கமான நேரத்தில் (6.30-7) நடைபெறும். எனவே மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !