உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் சீரமைக்க நடவடிக்கை தேவை!

பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் சீரமைக்க நடவடிக்கை தேவை!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த வேலம்பூண்டி கிராமத்தில் சிதிலமடைந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ  பெருமாள் கோலை இந்து அறநிலையத் துறையினர் புரனமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டுமன்னார்கோவில்  அடுத்த வேலம்பூண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 ஏக்கர் நிலப்பரப்பில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மேலும் இக்÷ காவிலுக்கு 15 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சுவாமி மாசி மகத்தின் போது  கொள்ளிடம் ஆற்றிற்கு தீர்த்தவாரி சென்று திரும்பும் போது வேலம்பூண்டி பெருமாள் கோவிலில் இரண்டு நாட்கள் சுவாமி தங்கும். அப்போது சிற ப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். தற்போது கோவில் ஸ்திரத்தன்மையை இழந்து சிதிலமடைந்து திறக்கப்படாததால் எய்யலூரில்  சுவாமி தங்கிச் செல்கிறது. சிறப்பு வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தை பார்த்து வந்தவர்கள் மாறியதால் மீண்டும் புதிய நிர்வாகிகள்  நியமிக்கப்படவில்லை. இதனால், இக்கோவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்பாரற்று போனது. கோவில் சுவர்கள்,கோபுரங்களில் மரங்கள்  வளர்ந்து பலமிழந்து வருகிறது. எனவே, இந்து அறநிலையத்துறை இக்கோவிலை நிர்வகிக்க முன்வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !