பண்ருட்டியில் ருத்ர ஹோமம்!
ADDED :4019 days ago
பண்ருட்டி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வை விடுதலை செய்யக் கோரி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆவஹந்தி, ருத்ர ஹோமம் நடந்தது. நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொகுதி செயலர் ராமசாமி, அவைத் தலைவர் ராஜதுரை, சபாபதி, மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், தொழிலதிபர்கள் வைரக்கண்ணு, மோகன், சம்பத்லால், மாயகிருஷ்ணன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், கவுன்சிலர்கள் ராமதாஸ், ரமேஷ் மாவட்ட பிரதிநிதி ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.