மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் காஞ்சி மடாதிபதி தரிசனம்
ADDED :45 days ago
சென்னை; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் 5ம் தேதி காலை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்றார். கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூர்ணகும்பம் சாற்றி வரவேற்றனர். பின் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீ கற்பகாம்பாளுக்கு ஆபரணம் (மூக்குத்தி) சமர்ப்பணம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.