உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதி முடி காணிக்கையில் புதிய சாதனை

திருமலை திருப்பதி முடி காணிக்கையில் புதிய சாதனை

திருப்பதி; திருமலை என்றாலே லட்டும், மொட்டை தலையுடன் கூடிய  பக்தர்களும்தான் நினைவிற்கு வருவர். இந்த ஆண்டின் கருட சேவையின் போது  கடந்த ஆண்டை விட கூடுதலாக 10,000 பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்கியுள்ளதாக கல்யாண கட்டா  அதிகாரி வெங்கடையா தெரிவித்துள்ளார். மொட்டை போடும் பணியில்  1,148 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஏழு நாட்களில் 2.11 லட்சம் பக்தர்கள்  தங்களின் முடியை காணிக்கையாக வழங்கியுள்ளனர். புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை  அன்று மட்டும் 49,088 யாத்திரிகர்கள் முடிகாணிக்கை செய்துள்ளனர்,இது ஒரே நாளில் மொட்டை போட்ட அதிகபட்சி பக்தர்களின் எண்ணிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !