உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரத்யங்கிராதேவி சிலை ஊர் தோறும் கரிக்கோலம்!

பிரத்யங்கிராதேவி சிலை ஊர் தோறும் கரிக்கோலம்!

திருவெண்ணெய்நல்லூர்: வேலூர் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ள பிரத்யங்கிராதேவி சிலை திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கரிக்÷ கால பவனி நடந்தது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரிபீடத்தில் 70 கோவில்கள் மற்றும் 468 சித்தர்களின் கோவில்கள் உள்ளன.  இத்துடன் பிரத்யங்கிராதேவிக்கு கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு  சிலை கரிக்கோல பவனி கடந்த 29.8.14ம் தேதி துவங்கியது. ஆறு  அடி உயரமுள்ள பிரத்யங்கிராதேவி சிலையை டாடாஏசிஇ வாகனத்தில் வைத்து  கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் சுற்றி வரச்செய்துள்ளனர்.  நேற்று காலை 11:00 மணிக்கு திரு வெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பிற்கு சிலை வந்தடைந்தது. தெருத்தெருவாக  சிலை பவனி நடந்தது.மதியம் 1:30 மணிக்கு  அரியலூருக்கு புறப்பட்டது.  ஏற்பாடுகளை ஆலை ஊழியர்கள் பரஞ்ஜோதி, ராஜேந்திரன் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !