திண்டிவனத்தில் சத்ய நாராயணா பூஜை!
ADDED :4012 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் சத்ய நாராயணா பூஜை நடந்தது. மயிலம் ரோடிலுள்ள என்.பி.சி கோவிந் தம்மாள் மண்டபத்தில் நடந்த பூஜையில் ஏராளமானோர் தம்பதி சமேதராக கலந்து கொண்டனர். கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், சத்ய நாரா யணன், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கான பூஜைகள் நடந்தது. சென்னை மயிலாப்பூர் சாய்பாபா அறக்கட்டளையை சேர்ந்த மணி ஐயர் பூ ஜைகளை நடத்தினார். பூஜையில், டிரஸ்ட் தலைவர் செந்தில் உமா, சேர்மன் வெங்கடேசன், அவரது மனைவி சாவித்திரி, பி.ஆர்.எஸ்., துணிக்கடை சத்தீஷ், சுமதி, செயலர் கந்தசாமி, பொருளாளர் வழக்கறிஞர் தங்க சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் கோதைபாலாஜி, சாய் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.