வேணுகோபால் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்!
ADDED :4012 days ago
கடம்பத்துார் : கடம்பத்துாரில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால் கோவிலில் நேற்று மகா சம்ப்ரோக் ஷணம் நடந்தது. கடம்பத்துார், எம்.ஜி.ஆர்., நகரில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று காலை 11:15 மணிக்கு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்களும், பூர்ணாஹூதி தீபாராதனையும், அதை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. அதன்பின், நேற்று, காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதையடுத்து, பூரணாஹூதியும் நடந்தது. காலை 11:15 மணிக்கு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. பின், இரவு சுவாமி மலர் அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது.