உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுப்பரூர் கோவில் தேர் திருப்பணி சுணக்கம்!

காட்டுப்பரூர் கோவில் தேர் திருப்பணி சுணக்கம்!

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், தேர் திருப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மங்கலம்பேட்டை அடுத்த காட்டு ப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில்,  இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த கோவிலுக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட  பல பகுதியைச் சேர்ந்த பக்தர்கள்  வழிபட்டுச் செல்கின்றனர். இந்து அறநிலையத்துறை சார்பில் கோவிலில், கடந்தாண்டு 27 லட்சம் ரூபாய் மதிப்பில்  தேர் திருப்பணி துவங்கி, நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேர் செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து  கோவில் அறங்காவலர் ஆதிகேசவன் கூறுகையில், ‘இந்து அறநிலையத் துறை சார்பில், கடந்தாண்டு 27 லட்சம் ரூபாய் மதிப்பில் திருத்தேர் பணி   துவங்கியது. தேர் செய்யும் பணிக்கு தேவையான இலுப்பை மரப் பலகைகள் கிடைக்காததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணி நிறுத்தப் பட்டது. மரப் பலகைகள் கிடைத்ததும் தேர் கட்டுமான பணி துவங்கும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !