புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் தேர் பவனி!
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலய 60ம் ஆண்டு பெருவிழா தேர் பவனி நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலய 60ம் ஆண்டு பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 6.௦௦ மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5:00 மணிக்கு திருப்பலியும் சிறிய தேர் பவனியும் நடந்தது.ஆண்டு பெருவிழாவில் நேற்று காலை 7:30 மணிக்கு கட லுார்–புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி, மாலை 5:30 மணிக்கு பெரிய தேர்பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தேர் பவனியை துவக்கிவைத்தார். இன்று(14ம் தேதி) காலை 6:30 மணிக்கு திரு ப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை, பங்குமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.