காமாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :3980 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே காளையர் கரிசல்குளம் ஸ்ரீ நாராயண நந்தவனத்தில், ஆனந்த விநாயகர் வளாகத்தில் அமைந்துள்ள வளர்பிறை காமாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. ஸ்ரீ.ல.ஸ்ரீ. வரதராஜ சுவாமிகள் கலந்து கொண்டார். ரவி பட்டாச்சாரியா தலைமையில் இரு கால யாகங்கள்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.