உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 480 வாகனங்கள் திருமலை செல்ல தடை!

480 வாகனங்கள் திருமலை செல்ல தடை!

திருப்பதி : திருமலையில், நிபந்தனைகளை மீறிய, 480 வாகனங்களுக்கு, மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அலிபிரி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரி கூர்மாராவ் கூறியதாவது: திருமலை மலைப்பாதையில் விபத்து நேராமல் தடுக்க, மலைப்பாதையில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், தேவஸ்தான பாதுகாப்புத் துறை கால இடைவெளி நிர்ணயித்து, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதை மீறும் வாகனங்களுக்கு அபராதமும், மலைப்பாதையில் செல்ல தற்காலிக தடையும் விதிக்கப்படும். இம்மாதம், 8, 9, 10 தேதிகளில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அதிக பாரம் ஏற்றியவை, வேகக் கட்டுப்பாட்டை மீறியவை என, 480 தனியார் வாகனங்களுக்கு, ஒரு வாரம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !