கோவை பாத்திமா அன்னை தேர்த்திருவிழா
ADDED :4009 days ago
கோவை: காந்திபுரம் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் தேர்திருவிழா நடந்தது. தேர்திருவிழாவிற்கு, கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமை வகித்து, திருப்பலியை நடத்தினார். பாதிரியார்கள், சாந்தி ஆசிரம துறவிகள், பங்குமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தியையும், போப்பாண்டவரின் கொடியையும் கையில் ஏந்தி, உலக அமைதி, சமய நல்லிணக்கத்துக்காக ஜெபமாலை தேர்பவனியில் பங்கேற்றனர். இறுதியாக, திவ்ய நற்கருணை ஆசியோடு தேர்திருவிழா நிறைவடைந்தது.