மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு டன் இனிப்புகளால் அலங்காரம்!
ADDED :4007 days ago
கோவை : தீபாவளியை முன்னிட்டு கோவை, சேரன்மாநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், ஒரு டன் இனிப்புகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.கோவை, சேரன்மாநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளியன்று சுவாமிக்கு இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.இவ்வாண்டு ஒவ்வொரு பக்தர்களும் தங்களால் இயன்ற ஸ்வீட் வகைகளை கோவிலுக்கு வழங்கினர். இவ்வாறு பெறப்பட்ட ஒரு டன் லட்டு, பாதுஷா, ஜிலேபி உள்ளிட்ட பலவகை இனிப்புகளை கொண்டு சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு படைத்த ஸ்வீட் வகைகள் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படும் காப்பகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.