உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், இன்று, கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, இன்று துவங்கி, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில், சண்முகப்பெருமானுக்கு, இன்று முதல், வரும், 29ம் தேதி வரை, கந்த சஷ்டியை முன்னிட்டு, காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை விழா நடக்கிறது.விழாவை ஒட்டி, தினமும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்பம், பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கும்.அதை தொடர்ந்து, காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெறும். வரும், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சண்முகப்பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணமும் நடக்கிறது. மேலும் கந்தசஷ்டி முடியும் வரையும், மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு, உச்சிகால பூஜையில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !