உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கந்தசஷ்டி விழா : பக்தர்கள் காப்பு கட்டினர்!

பழநியில் கந்தசஷ்டி விழா : பக்தர்கள் காப்பு கட்டினர்!

பழநி:  கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புகட்டுதல் நடந்தது. பக்தர்கள் கையில் காப்புகட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர். மூன்றாம் படைவீடான பழநியில் அக்.,24 முதல் 30 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிகால வேளையில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புகட்டுதல் நடந்தது. அதே நேரத்தில் பக்தர்களும் தங்கள் கையில் காப்புகட்டி, சஷ்டிவிரதத்தை துவங்கினர். மாலையில் தங்கசப்பரத்தில் சின்னக்குமாரசுவாமி திருவுலா வந்தார். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் அக்.,29லும், திருக்கல்யாணம் அக்.,30ல் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !