உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

புதுப்பாளையம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!

கடலூர்: கடலூர், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையெ õட்டி தினமும் காலை 9:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, இரவு 7:00 மணிக்கு மாடவீதியுலா நடந்து வருகிறது.  வரும் 28ம் தேதி காலை 9:00  மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி  சூரசம்ஹாரம் செய்து, ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா, 30ம் தேதி சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருமணமும், மயில் வாகனத்தில்  வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !