உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு!

மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. சேத்தியாத்÷ தாப்பு வடக்கு சென்னிநத்தம் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா கடந்த மாதம் நடந்தது. இதனையொட்டி 48 நாள் மண்டலாபிஷேக  பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மண்டலாபிஷேக நிறைவு விழா  விக்னேஸ்வரபூஜை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து  மகா  சங்கல்பம்,  கலசபூஜை, அர்ச்சனை, விசேஷ திரவிய ஹோமம், மகா பூர்ணாகுதி, வேதபாராயணம் மற்றும் மகாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை வெங்கடேஸ்வர தீட்சிதர் நடத்தினார். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு  அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !