வெங்கடேச பெருமாள் கல்யாண உற்சவம்!
ADDED :4001 days ago
பெங்களூரு : பிரேசர் டவுன், பூமி நீள சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் சன்னிதியின், 26ம் ஆண்டு விழா, கல்யாண உற்சவம், நவம்பர் முதல் தேதியிலிருந்து, 3ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான, நவ., 1ம் தேதி, காலை, கணபதி ஹோமம், நவக்கிரஹ வாஸ்து ஹோமம், இரவில், ஐயப்பன் பஜனை; நவ., 2ம் தேதி, காலை, வெங்கடேச பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சன அபிஷேகம், சீனிவாச பெருமாள் கல்யாண உற்சவம், மாலையில், வெங்கடேஷ பெருமாள் தாயாருடன் திருவீதி உலா பவனி நடக்கிறது. நவ., 3ம் தேதி, காலை, அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனையும், மாலை, இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.