உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடிமுருகன் கோயில்களில் நாளை திருக்கல்யாணம்!

பரமக்குடிமுருகன் கோயில்களில் நாளை திருக்கல்யாணம்!

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று மாலை சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதன் படி தரைப்பாலம் அருகில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில், காலை சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. மாலை 4 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா வருவார். பின்னர் 6 மணிக்கு கோயில் முன்பாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.  நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள், முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு பட்டணப்பிரவேசம் நடக்கவுள்ளது. இதே போல் இரவு 7 மணிக்கு பாரதிநகர் செல்வகுமரன் கோயில் முன்பாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !