உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்த சஷ்டி விழா விரதம் நிறைவு!

வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்த சஷ்டி விழா விரதம் நிறைவு!

பழநி : கந்தசஷ்டி விழாவில் அக்.,24 ல் காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் நேற்று பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் விரதத்தை முடிப்பதற்காக குழுக்களாக அமர்ந்து வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கருவறையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்தபின் வாழைத்தண்டுடன் தயிர் கலந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினர். உடுமலை பக்தர் மாரியம்மாள் கூறுகையில்,“ பல ஆண்டுகளாக கந்த சஷ்டிவிரதத்தை மேற்கொண்டு வருகிறோம். ஒருவாரம் முழுவதும் கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் படித்து சூரசம்ஹாரத்தன்று விரதத்தை நிறைவு செய்துவது வழக்கமாகும். அதன்படி வாழைத்தண்டுடன் பழங்களை சேர்த்து தயாரித்த நைவேத்யத்தை சுவாமிக்கு படைக்கிறோம். சில பக்தர்கள் ஆப்பிள், மாதுளை, திராட்சை, கேரட் உள்ளிட்ட பழம், காய்கறிகளில் படையல் தயார் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து கையில் கட்டிய காப்பை கழற்றி சஷ்டி விரதத்தை முடிப்பர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !