உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் சுப்ரமணியர் கோவிலில் வேல் வாங்கும் உற்சவம்!

நெல்லிக்குப்பம் சுப்ரமணியர் கோவிலில் வேல் வாங்கும் உற்சவம்!

நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகன் வேல் வாங்கும் விழா நடந்தது. நெல்லி க்குப்பம் அடுத்த காராமணிக்கப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும்  சிறப்பு அபிஷேகமும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் அதனைத்  தொடர்ந்து சூரனை சம்ஹாரம் செய்ய முருகன் தன் தாயிடம் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் எழுந்தருளி தன்  தாயிடம் வேல் வாங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !