உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் திருக்கல்யாணம்: குன்றத்திலிருந்து சீர்வரிசை!

சோலைமலை முருகன் திருக்கல்யாணம்: குன்றத்திலிருந்து சீர்வரிசை!

அழகர்கோவில் : அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்., 24ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. மாலை 5 மணிக்கு முருகப் பெருமானுக்கு சாந்த அபிஷேகம் நடந்தது.

நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது.இதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து நிர்வாக அதிகாரி பச்சையப்பன், கண்காணிப்பாளர் பாலலட்சுமி தலைமையில் சுவாமிக்கு பட்டு வேட்டி, பட்டுச்சேலை, பழங்கள், மாலை போன்றவை சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !