உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்ஹாரம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சூரசம்ஹாரம்!

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம்  நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்  பங்கேற்றனர். நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது.முருகப்பெருமானின் அவதார ÷ நாக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி திருச்செந்துõரில் சூரனை சம்ஹாரம்  செய்ததாக கந்த புராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற,  இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 23 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர், ஆட்டுக்கிடா, தங்கமயி ல்,வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிழ்ச்சியான சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி,கடந்த 28 ம் தேதி இரவு நடந்தது.முருகப்பெருமான்,அன்னையிடம்  சக்திவேல் வாங்கியவுடன் மானிடருக்கு வியர்ப்பது போன்று முருகனின் திருமேனியெங்கும் வியர்த்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.  தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன், கோவிலில் இருந்து எழுந்தருளி சூரன்  போருக்காக காத்திருந்த இடம் நோக்கி ஆவேசத்துடன் வந்தார்.ஒரு கையில் ஆட்டின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டும்,மறுகையில் வேல்நெடு ங்கண்ணியிடம் சூரனை வதம் செய்வதற்காக சக்திவேலுடன்  சூரனை நெருங்கியவர், கஜமுகம்,சிங்கமுகம்  தாங்கி வந்த சூரனை வதம் செய்தார்.  சூரனை வதம் செய்து முடித்ததும் சிங்காரவேலவர் இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்  கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !