சரபேஸ்வரர் யார்?
ADDED :5281 days ago
இரணியனை வதம் செய்த நரசிம்மரின் ஆவேசம் தணியாமல் இருந்ததைக் கண்டு சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டினர். அவர் சரபப் பறவை போல் உருவமெடுத்து நரசிம்மரை நெருங்கினார். பின்னர் நரசிம்மர் உக்கிரம் அடங்கி சாந்தமானார். எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கம் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராய் இவர் தோன்றினார். சரபம் போல் உருவமெடுத்த இவரை சரபேஸ்வரர் என்றனர். மன அமைதி கிடைக்க, பய உணர்வு குறைய, வழக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.