உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் கமலாலயக்குளக்கரை சரி செய்யும் பணி துவக்கம்!

திருவாரூர் கமலாலயக்குளக்கரை சரி செய்யும் பணி துவக்கம்!

திருவாரூர்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழையில் இடிந்து விழுந்த திரு வாரூர் தியாகராஜர்கோவிலலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் வடக்குப்பகுதி கரை சரி செய்யும் பணி திமுக., பொருளாளர் ஆய்வி ற்குப் பின் துவங்கியது.  திருவாரூர் தியாகராஜர்கோவிலுக்கு சொந்தமான கமலாலயக்குளம் கோவிலுக்கும் மேற்குப்பகுதியில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர் கள் கோவில் குளத்தில் குளித்து, தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை வணங்கி வந்தனர். மேலும் கோவில் குளத் திலன் நடுவில் உள்ள நாகநாத சுவாமியை படகில் சென்றும் வணங்கி வந்தனர். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மழையில் 240 மீட்டர் தொலை விற்கு வடக்குப்பகுதியில் குளத்தின் கரை இடிந்து விழுந்தது. நேரில் ஆய்வு செய்த அப்போதை கலெக்டர் விரைவில் சரி செய்யப்படும் என்றார். அதன் பணிகள் துவங்காமல் கிடப்பி்ல்போடடப்பட்து. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி நிதி ஒதுக்கியதில் தமிழக அரசு ஏற்க மறுத்தது.

இந்து சமய அறநிலைத்துறை மூலம் திட்ட மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கியும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சா லைத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்திற்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்சனையால் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தற்போதை முதல்வர் ஓ.பி., உள்ளிட்ட அமைச்சர்கள் வந்த நிலையில் கோவில் குளம் குறித்து கண்டு கொள்ள வில்லை. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு அள்ளாடி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் குளத்தின் மேற்குப் பகு தியில் சில இடங்களில் கரை பகுதி இடிந்து விழுந்தது. இதனால் சா லை பகுதி வலுவிழந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடை செய் யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் திமுக., பொருளாளர் ஸ்டாலின் கட்சி ஆய்வு கூட்டத்திற்கு வந்த போது மாவட்டத்தில் பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தவர் அன்றைய தினமே கலெக்டர் மதிவாணனை நேரில் சந்திந்து மனு அளித்தார். இச்சம்பவம் மாவடத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதனால் மூவர் பணியிடை மாற் றம் செய்யயப்பட்டனர். தற்போது கமலாய குளத்தின் மேற்கு பகுதி கரை சரி செய்யும் பணிது வங்கியுள்ளது. ஆனால் சமீபத்தில் மழையில் இடிந்து விழுந்த பகு திகள் குறித்து எந்த விபரமும் தெரிய வில்லை.  எனவே பாதிப்புகளை முயுமையாக சரி செய்து போக்குவரத்து இடை யூறு இல்லாமல் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !