உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்!

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்!

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று  காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் கும்மியடித்து, பஜனை பாடல் பாடினர்.  மதியம் 1.00 மணிக்கு  அன்னம் , பழம் மற்றும் காய்கறிகளால் சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் நுாற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !