கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பவித்ர உற்சவம்!
ADDED :3987 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் பூர்த்தி விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் கடந்த 5 நாட்களாக நடந்தது. நேற்று காலை விஸ்வரூப தரிசனத்திற்குபின் பெரு மாள், தாயார், உபயநாச்சியார், ஆழ்வார்கள் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் பவித்ர மாலை சாற்றி பூஜைகள் செய்தனர். மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேசிக பட்டர் குழுவினர் பவித்ர உற்சவத்தை நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட இயக்குனர் முருகதாஸ் செய்து குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.