சென்னை சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்!
ADDED :3986 days ago
சென்னை: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள சிவாலயங்களில், மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி பவுர்ணமியில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, ஐப்பசி பவுர்ணமியான நேற்று, சென்னையில், மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவான்மியூர் மருந்தீசுவரர், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர், பாரிமுனை சென்னமல்லீஸ்வரர், வியாசர்பாடி ரவீஸ்வரர், எம்.கே.பி.நகர் நெசவாளர் காலனி ஓம்சக்தி விநாயகர், போரூர் ராமநாதீஸ்வரர், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட பல கோவில்களில், மூலவருக்கு, நேற்று, அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், நேற்று அன்னாபிஷேகத்துடன், கோவில் முழுவதும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.