அன்னமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4292 days ago
மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அன்னமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னமலை ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி மற்றும் பலர் முன்னிலையில் செந்தில் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க முருகன் வள்ளி, தெய்வானை திருகல்யாண உற்சவத்தை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் லட்சுமண சுவாமி தலைமையில் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.