உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேக விழா

சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேக விழா

வில்லியனுார்: பிறைசூடிய சிவபெருமான் கோவி லில் அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. உலக நன்மைக்காவும், விவசாய மகசூல் பெருகவும், ஐப்பசி மாதத் தில் வருகின்ற பவுர்ணமியன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேக விழா நடத்துவது வழக்கம். வில்லியனுார் அருகே, பொறை யூர் பேட்டில் உள்ள பிறைசூடிய சிவபெருமான் கோவில் நேற்று அன்னாபிஷேக பூஜை நடந்தது. பூஜையில் பல்வேறு பழங்கள், காய்கறிகள், உணவு பொருட்களை கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !