மயிலாடுதுறையில் துலா உற்சவ திருக்கொடியேற்றம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் கோயில், வள்ளலார்கோயிலில் திருக்கொடியேற்றம் நடந்தது. கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெரு மானிடம் வேண்டிய போது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புனிய நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.
பெருமைமிக்க துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசிமாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர்,அறம்வளர் த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகிய சுவாமிகளும் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளி காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசிமாதம் 30 நாட்களும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 18ம் தேதி ஐப்பசி மாத பிறப்பு முதல்நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. அத னை தொடர்ந்து ஐப்பசி 20ம் நாள் மாயூரநாதர் சுவாமி கோயில், வள்ளலார் கோயிலில் திருக்கொடியே ற்றத்துடன் 10 நாள் உற்சவம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி நேற்று அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செ ய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. பூஜைகளை சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய் துவைத்தனர். இதில் சிவபுரம் வேதசிவாகமபாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார், கோயில் க ண்காணிப்பாளர் குருமூர்த்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் (வள்ளலார் கோயில்) சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றம் நடந்தது. அதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அங்கு சுப்ரமணியசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியாளர்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்கொடியேற்றப்பட்டது. இதில் கோயில் கண்காணிப்பாளர் நடராஜன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். துலா மாத கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவாக வரும் 11ம் தேதி சகோபுர தரிசனம், 13ம் தேதி திருக்கல்யாணம், 15ம் தேதி திருத்தேரோட்டம், 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.