அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :3996 days ago
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில் உள்ள, காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, உலக நன்மைக்காக, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு வடூக பைவரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.