ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்!
ADDED :3987 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில் 1008 சங்கா பிஷேகம் நடந்தது. மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிற ப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இரவு உற்சவ மூர்த்தி ராமநாதீஸ்வர் மற்றும் ஞானாம்பிகை அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பாலகிருஷ்ணய்யர், தர்மகர்த்தா ரவிச்சந்திரன், உபயதாரர் வைத்தியலிங்கம், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ண மூர்த்தி செய்தனர்.