அய்யப்ப சுவாமிக்கு 108 கலசாபிஷேகம்!
ADDED :4028 days ago
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் சிதம்பரேஷ்வரர் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடந்தது. அதிகாலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அய்யப்பன் கோவில் முன்பு கலசங்கள், சங்கு ஆவாகனம் செய்து மந்திரங்கள் வாசித்து பூஜை செய்தனர். மூலவர் மற்றும் உற்சவர் அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்தனர். யாகம் முடிந்து, சுவாமிக்கு 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. 108 கிலோ எடையில் புஷ்பாஞ்சலி செய்து அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜாமணி தலைமையிலான பக்தர்கள் செய்தனர். அம்பிகேஷ்வர குருக்கள் பூஜைகளை செய்தார்.