உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் குடிநீர் விநியோகம் பரிசோதனைக்கு மீன் வரவழைப்பு

சபரிமலையில் குடிநீர் விநியோகம் பரிசோதனைக்கு "மீன் வரவழைப்பு

சபரிமலை: சபரிமலையில்விநியோகம் செய்யும் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க "மீன்வரவழைக்கப்பட்டுள்ளது. "மீன் சோதனைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை சன்னிதானத்தின் குடிநீர் மற்றும் இதர தண்ணீர் தேவை அனைத்தையும் நிறைவேற்றி தருவது குன்னாறு அணைத்தண்ணீர். சன்னிதானத்தை விட உயரமான பகுதியில் இந்த அணை உள்ளது. இதனால் இங்கிருந்து பம்பிங் செய்யாமலே தண்ணீர் சன்னிதானத்துக்கு வருகிறது. ஒரு ஆண்டு பகுதி நாட்கள் இந்த தண்ணீர் பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை. மண்டல மகரவிளக்கு சீசனில் மட்டுமே இந்த தண்ணீர் பெருமாளவு பயன்படுத்தப்படுகிறது. சீசன் காலத்தில் இந்த அணைக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது. இந்நிலையில் இந்த தண்ணீரின் தரம் பற்றி சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து முதற்கட்ட பரிசோதனைக்கு மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தயாராகி விட்டனர். இதற்காக இந்த துறையின் அலுவலகத்தில் உள்ள மீன் அருங்காட்சியகத்திலிருந்து "கப்பி என்ற ஒருவகை மீன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மீனை அணைத்தண்ணீரில் விடும் போது அந்த தண்ணீரில் அசுத்தமோ அல்லது விஷத்தன்மையோ இருந்தால் அந்த மீன் இறந்து மிதந்து விடும். அவ்வாறு இறந்தால் அடுத்த கட்டமாக ஆய்வகங்கள் மூலம் தொடர்பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !