சீரழியும் வசந்த மண்டபம்!
ADDED :4070 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வசந்த மண்டபம் பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. திருப்போரூரில் புகழ்பெற்ற கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை, கந்த சஷ்டி, பிரம்மோற்சவ விழா மற்றும் வசந்த விழா ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது. சித்திரை மாதம் நடத்தப்படும் வசந்த விழாவிற்கு, சுவாமி கந்தபெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பழமை வாய்ந்த இந்த வசந்த மண்டபம் கும்பாபிஷேக திருப்பணியின்போது சீரமைக்கப்படவில்லை. விடுமுறை தினங்களில் வசந்த மண்டபத்தை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. கோவில் நிர்வாகம், வசந்த மண்டபத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.