சத்ய சாயிபாபாவின் 89 வது பிறந்த நாள் விழா!
ADDED :3973 days ago
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி சுபேதார் தெருவில் உள்ள சேவாசமிதி சார்பில் சத்ய சாயிபாபாவின் 89 வது பிறந்த நாள் விழா கடந்த 23ம் தேதி நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள சாயிபாபா மையங்களின் மூலம் நகர சங்கீர்த்தனங்களும், பட ஊர்வல பஜனைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. நாராயணசேவை மூலம் மாணவர்களுக்கு நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கினர்.