உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி அனுக்ஞை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 26ம் தேதி  மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,   துர்கா நவாஷரி ஹோமம் மற்றும் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகா  தீபாராதனை, யாத்ராதானமும் 10:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:40 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  கும்பாபிஷேகத்தில் அருண்மொழி÷தவன் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம  பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !