உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: நெய்வழங்க உபயதாரர்களுக்கு அழைப்பு!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: நெய்வழங்க உபயதாரர்களுக்கு அழைப்பு!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் டிச. 5ல் மலைமீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திற்கு  நெய் வழங்க உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

டிச. 5 அன்று மாலை 6.15 மணிக்கு மலைமேல்  300 கிலோ நெய், 150  மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரத்தால் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இப்பொருட்கள் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. தீபத்திற்கு  நெய் உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள் விருப்பதிற்கு ஏற்ற அளவில் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம். என கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !