உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் குளத்திற்கு வேலி அமைக்கப்படுமா?

கோவில் குளத்திற்கு வேலி அமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் குளத்தில், சிறுவர்கள் குளிப்பதை தடுக்கும் வகையில், தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என,  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தின் மத்தியில், ராஜ வீதிகள் இணையும் இடத்தில் கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்÷ காவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் இஷ்டசித்தி தீர்த்தம் என்ற குளம் அமைந்துள்ளது.  இக்குளத்தின் படிகளில் பாசி படர்ந்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன், குளத்தில்  இறங்கி கால்களை சுத்தம் செய்ய, கால்களை குளத்தின் படியில் வைத்தால், வழுக்கி, குளத்தின் உள்ளே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இந்த  நிலையில், கார்த்திகை மாதத்தில் வரும் கடைஞாயிறு உற்சவத்திற்கும், சோமவார உற்சவத்திற்கும், அதிக அளவில் பக்தர்கள் குடும்பத்தினருடன்  வருகின்றனர். உற்சவத்தை காண வரும் சிறுவர்களில் சிலர், இக்குளத்தில் குதித்து ஆனந்த குளியல் போடுகின்றனர். படிகள் பாசி படர்ந்துள்ள  குளத்தில், சிறுவர்கள் குளிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே, சிறுவர்கள் குளத்தில் இறங்குவதை தவிர்க்க, தடுப்புவேலி கள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !