நெல்லி மரத்திற்கும் துளசி செடிக்கும் பக்தர்கள் சிறப்பு பூஜை!
ADDED :4069 days ago
திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மூன்றாவது சோமவார பூஜை நடந்தது. சுவாமிக்கும், அம்பாளுக்கும் மஹா அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள், பாலாஜி குருக்கள் செய்தனர். கோவிலில் உள்ள நெல்லி மரம் விஷ்ணுவாகவும், துளசி செடியை மஹாலட்சுமியாகவும் அலங்கரித்து சிறப்பு பூஜைகளை பெண் பக்தர்கள் செய்தனர். பெண்களுக்கு மங்களபொருட்கள் பிரசாதமாக வழங்கபட்டது.