உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி விழா!

யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி விழா!

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகர் சித்தாஸ்மரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் யோகி ராம் சுரத்குமாரின் 96வது   ஜெயந்தி விழா நேற்று நடந்தது . விழாவையொட்டி கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 29ம் தேதி வரை 36 நாள் வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு   சகஸ்ர நாம கோடி அர்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் சென்னை ஓம் சக்தி பஜனை மண்டலி குழுவினரின் பஜனை பாடல்கள், சத்ய நாராயணன்   குழுவினரின் கீபோர்டு இன்னிசை, பங்கஜம்தாசின் பஜனை பாடல்கள்,  மாலை 5 மணிக்கு நுõற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திரு  விளக்கு பூஜையும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு துவங்கி 12 மணி வரை அன்னை ஓம் பவதாரிணி தலைமையில் மகா கணபதி ஹோமம்,   மகாலட்சுமி ஹோமம், லலிதா சகஸ்ரநாம திரவ்யா ஹோமம், அஷ்ட பைரவர் யோக நாம ஹோமம், அஸ்தர ஹோமம் நடந்தது. 12 மணிக்கு   அன்னை ஓம் பவதாரிணியின் ஆசியுரை, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின் சிறப்பு சொற்பொழி நடந்தது. பேராசிரியை மகேஸ்வரி   நன்றி கூறினார். தொழிலதிபர் ராம்குமார், மங்கையர்கரசி, திருஞானசம்மந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !