பாதாள லிங்கம்!
ADDED :4142 days ago
மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது திருவண்ணாமலை கோயிலில் உள்ளபாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். இந்த இடத்தில் யோக நந்தியுடன் கூடிய பாதாள லிங்கம் இருக்கிறது. மரண பயம் நீங்க பாதாள லிங்கத்திடம் வேண்டிக் கொள்ளலாம்.