சிவலோகநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா!
ADDED :3968 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ஒட்டி நுாற்றி எட்டு சங்கு அபிேஷக பூஜை நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ஒட்டி, மாலை 3.30 மணிக்கு நுாற்றி எட்டு சங்கு தீர்த்தம் மற்றும் கலச தீர்த்தங்கள் வைத்து வேள்வி பூஜை நடந்தது. பின், மாலை 5.30 மணிக்கு நுாற்றி எட்டு சங்கு தீர்த்தம் மற்றும் கலச தீர்த்தங்கள் கொண்டு சிவலோகநாதர் உற்சவ மூர்த்திக்கு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்தி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.