உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவா - விஷ்ணு கோவிலில் 108 சங்காபிஷேகம்

சிவா - விஷ்ணு கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருவள்ளூர்: கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, சிவா - விஷ்ணு கோவிலில், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோமவார வழிபாடு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மூன்றாவது சோமவார வழிபாட்டை முன்னிட்டு, சிவா - விஷ்ணு கோவிலில் மாலை 4:00 மணிக்கு, 108 சங்கு பூஜை, அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹூதியும் புஷ்பவனேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின், மாலை 6:30 மணிக்கு, திருத்தேரில் புஷ்பவனேஸ்வரர் ஆலய உலா நடந்தது. திருவள்ளூர் பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை அருணாசல ஈஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, சங்காபிஷேகமும் 1008 திருமுறை போற்றி அர்ச்சனையும் நடந்தது. திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், சிவனுக்கும், அம்பிகைக்கும் அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு உட்புறப்பாடு நடந்தது. மணவாள நகர், மங்களேஸ்வர் கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும், சோமவார வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !