துர்க்கை அம்மன் கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை!
ADDED :3966 days ago
வால்பாறை : கார்த்திகை மாத சிறப்பு பூஜையில், துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள துர்க்கை அம்மன் கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று முன் தினம் மாலை கார்த்திகை மாதத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.சிறப்பு அலங்காரத்தில் அம்மன்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.